பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் ஒரு தியேட்டர் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஆனால் அங்கு நிழற்குடை எதுவும் இல்லை. இதனால் மழை, வெயிலில் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.