பஸ் வசதி

Update: 2025-12-14 14:12 GMT

கோபியில் இருந்து அந்தியூர் செல்ல தினமும் மாலை 6.10 மணிக்கு ஏ20 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பஸ் காரணமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாலை நேரங்களில் அந்தியூருக்கு செல்ல பஸ் வசதியின்றி தவித்து வருகிறார்கள். 6.30 மணிக்கு மேல் வரும் புறநகர் பஸ்சில் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலன்கருதி மீண்டும் ஏ20 பஸ்சை மாலை 6.10 மணிக்கு அந்தியூருக்கு இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி