அந்தியூர்- கோபி மார்க்கமாக காலை 6.50 மணிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அதன்பின்னர் 9 மணிக்கு பஸ் அங்கிருந்து புறப்பட்டு அத்தாணிக்கு 9.30 மணிக்கு வருகிறது. ஆனால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்பே வகுப்புகள் தொடங்கிவிடுவதால் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் புறநகர் மற்றும் தனியார் பஸ்களில் பயண கட்டணம் கொடுத்து படியில் நின்றபடி செல்கின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி அந்தியூரில் இருந்து கோபி மார்க்கமாக காலை 8.10 மணிக்கு அரசு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?