சேலம் இரும்பாலை மெயின் ரோட்டிலிருந்து பூமிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் சோலார் மூலம் அமைக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை சிக்னல் விளக்கு உள்ளது. இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து கீழே தொங்கிக் கொண்டு உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிக்னல் விளக்கை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.