ஒளிராத போக்குவரத்து சிக்னல்

Update: 2025-11-02 10:36 GMT

கோவை திருச்சி சாலை ஒண்டிபுதூரை அடுத்த காமாட்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து சிக்னல் உள்ளது. ஆனால் அந்த சிக்னல் ஒளிருவது இல்லை. நீண்ட நாட்களாக பழுதாகி கிடக்கிறது. இதனால் அங்கு வரும் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. மேலும் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த போக்குவரத்து சிக்னலை பழுது நீக்கி மீண்டும் செயல்பட வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்