சீரான பஸ் வசதி தேவை

Update: 2025-11-02 07:06 GMT

பள்ளியாடியில் இருந்து தக்கலை மற்றும் நாகர்கோவிலுக்கு தினமும் சுமார் 10 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு எந்த சிரமமும் இன்றி பயணம் செய்து வந்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் 7ஜி, 310, 310 இ ஆகிய 3 பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் பஸ்சிற்காக 2 முதல் 3 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்களை சீராக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்