பாதசாரிகள் அவதி

Update: 2025-11-02 07:05 GMT

அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் விரைவு பஸ் பணிமனை வழியாக இயக்கப்படுகிறது. பஸ்கள் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் சாலை மிகக்குறுகியதாக காணப்படுகிறது. மேலும் அச்சாலையில் பல கடைகள் உள்ளன. இதனால் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதாரிகள் நலன்கருதி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களை கான்வென்ட் பள்ளி, கோட்டார் போலீஸ் நிலைய ரவுண்டானா, மீனாட்சிபுரம் வழியாக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்