கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானா, கே.தியேட்டர் பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நீண்டநேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. குறிப்பாக சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் இந்த பகுதியில் நீண்டநேரம் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. போக்குவரத்து பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டாலும் 5 ரோடு ரவுண்டானா சந்திப்பு சாலைகளில் 4 சக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள நேரத்தில் இந்த நெரிசல் காணப்படுகிறது. எனவே போக்குவரத்து பிரிவு போலீசார் இதை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.
-பழனி, கிருஷ்ணகிரி.