கோவை ஒண்டிபுதூர் அடுத்த காமாட்சிபுரம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து பஸ் ஏறி பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சமீப காலமாக அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் நின்று செல்வது இல்லை. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்பதால், பெண்கள் அந்த பஸ்களை நம்பியிருக்கின்றனர். ஆனால் நிற்காமல் செல்வதால் அவர்கள் தனியார் பஸ்களில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே அந்த வழியாக செல்லும் அனைத்து அரசு டவுன் பஸ்களும் நிறுத்தத்தில் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.