ஆற்றூர் சந்திப்பு எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆற்றூரை சுற்றி பல பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளதால் இங்கு காலை மாலை நேரங்களில் பள்ளி-கல்லூரி வாகனங்களாலும், மற்ற வாகனங்களாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவததால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி ஆற்றூர் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க காலை, மாலை நேரங்களில் ஒரு போலீசை பணியமர்த்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின், ஆற்றூர்.