சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டான கவுண்டம்பாளையம் மதுரைவீரன் கோவில் பகுதியில் உள்ள சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க மதுரைவீரன் கோவில் பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?