கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்நரியப்பனூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒகையூர் அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆனால் இவர்கள் பள்ளிக்கு சென்று வர எவ்வித பஸ் வசதியும் இல்லாமல் கால்கடுக்க நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்றும் வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பஸ் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.