திருக்கோவிலூரில் இருந்து திருவெண்ணெய்நல்லூருக்கு செல்ல இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் கால்கடுக்க நடந்தே வெகு தூரம் செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி திருக்கோவிலூர்-திருவெண்ணெய்நல்லூர் வழித்தடத்தில் இரவு நேரங்களில் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.