கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. நாள்தோறும் பல்வேறு கோரிக்கைகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகிறார்கள். குறிப்பாக திங்கட்கிழமைகளில் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், சூளகிரி உள்பட பல பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு பஸ்களில் வருகிறார்கள்.
அவ்வாறு வரும் பஸ்களில் பெரும்பாலானவை கலெக்டர் அலுவலகம் அருகில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் சுங்கச்சாவடி அருகில் இருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடிய பயணிகளை அங்கு இறக்கி விட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், அஞ்செட்டி.