நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்

Update: 2025-10-12 10:35 GMT

கோவை சாய்பாபாகாலனியில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, கூடலூர், குன்னூர், மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது மேம்பால பணி நடைபெற்று வருவதால், அங்கு டவுன் பஸ்கள் நின்று செல்லாமல், சுற்றி செல்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள். எனவே அந்த வழியாக சென்று வரும் அனைத்து டவுன் பஸ்களும் பஸ் நிலையத்தில் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்