பெங்களூரு நகரில் ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல தனியார் வாகனங்களுக்கு பயணிகள் ஏறும் இடமாக சுங்கச்சாவடி அருகில் குறிப்பிடப்படுகிறது. மழைக்காலங்களிலும், வெயில்காலங்களிலும் அந்த இடத்தில் ஒதுங்க இடமின்றி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சுங்கச்சாவடி அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். அதேபோல அந்த பகுதியில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லை. ஆகவே அங்கு உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்க வேண்டும்.
-ரவிக்குமார், கிருஷ்ணகிரி.