கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையில் ஒரு பகுதி அடைக்கப்பட்டு மற்றொரு வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக அரசு மருத்துவமனை, நகராட்சி உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கு செல்லும் மக்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகளை துரிதப்படுத்திட வேண்டும்.
-சபரி, கிருஷ்ணகிரி.