பயணிகள் அவதி

Update: 2025-10-05 09:44 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா முத்தரசநல்லூர், முருங்கப்பேட்டையில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் தினந்தோறும் தினக்கூலிக்கும், பள்ளிக்கும் சென்று வருகின்றனர். இப்பகுதியில் கரூர் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக விரிவாக்கம் செய்யும்போது அங்கு இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டி கொடுக்கவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்