மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

Update: 2025-10-05 09:43 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் அரியலூர் செல்லும் குறுகிய சாலையில் மண்ணுழி பிரிவு பாதை உள்ளது. அதற்கு தென் புறத்தில் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. அந்த பலகையின் மீது அங்குள்ள மரக்கிளைகள் படர்ந்து அறிவுப்பு பலகையை மறைத்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களிலிருந்து இவ்வழியாக வேகமாக இருசக்கர வாகனங்களில் வரும் போது விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அறிவிப்பு பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்