பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2026-02-22 13:51 GMT

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் வழியாக கலெக்டர் அலுவலக சாலையில் பஸ்கள் செல்ல அனுமதி கிடையாது. பஸ்கள் துறைமங்கலம் வழியாக தான் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் ஒரு சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் துறைமங்கலம் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கலெக்டர் அலுவலக சாலை வழியாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வருகின்றன. இதனால் அந்த பஸ்களில் வரும் துறைமங்கலம் பயணிகள் பெரம்பலூர் பாலக்கரையில் இறக்கி விடப்படுகின்றனர். அவர்கள் ஷேர் ஆட்டோவில் காசு கொடுத்து தங்களது பகுதிக்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கலெக்டர் அலுவலக சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி