ஆடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2025-09-28 15:35 GMT

சமீப காலமாக அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் அதிக அளவு வெள்ளாடுகள் சுற்றித்திரிகின்றன. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் காலையில் ஆடுகளை வெளியே விரட்டி விடுகின்றார்கள். அவைகள் வீதிகளில் சுற்றித்திரிகின்றன. மேச்சலுக்கு மெயின் சாலை வழியாக நகர எல்லைக்கு வெளியே சென்று சாலையோரங்களில் மேய்ந்து கொண்டு நடுரோட்டுக்கு வந்து விடுகின்றன. இதனால் இப்பகுதியில் சென்று வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆடுகள் குறுக்கே வருவதால் சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அரவக்குறிச்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் வெள்ளாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்