பஸ் வசதி வேண்டும்

Update: 2025-09-28 10:33 GMT

திருச்சி மாவட்டத்தின் வடக்கு திசையில் துறையூர் நகரம் அமைந்துள்ளது. துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 64 கிராமங்கள் பச்சை மலையில் இருக்கும் கோம்பை, வண்ணாடு, தென்பறநாடு ஆகிய ஊர்களுக்கு துறையூர் தாலுகாவாக அமைந்துள்ளது. துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தொழில் நகரமான திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த வாரம் மணப்பாறையில் இருந்து புதிய வழித்தடத்தில் திருப்பூர் செல்வதற்கு அரசு போக்குவரத்துக் கழக பஸ் வசதி பயணிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அங்குள்ள மக்கள் எளிதில் தொழில் நகரமான திருப்பூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதேபோல் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய 2 இடங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. 1970-ல் நகராட்சியான துறையூர் நகரிலிருந்து இன்றுவரை தொழில் நகரம் திருப்பூர் செல்ல அரசு பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் துறையூரில் இருந்து திருச்சி வழியாக திருப்பூருக்கு அரசு பஸ் செல்கிறது. இது சுற்று வழித்தடம் ஆகும். பயண நேரம், பயணத் தொலைவு, பயண கட்டணம் ஆகியவை திருச்சி வழியாக சென்றால் அதிகம். எனவே துறையூரில் இருந்து முசிறி, குளித்தலை, கரூர், காங்கேயம் வழியாக திருப்பூர் செல்வதற்கு நேரடி அரசு பஸ் வசதிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்