அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

Update: 2025-09-21 18:03 GMT

தர்மபுரி நகரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதான பிடமனேரி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் வழியிலேயே நிறுத்திவிட்டு அங்குள்ள கடைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் நிறுத்தப்படும் ஆக்கிரமிப்பு வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகனங்கள் நிறுத்தாதவாறு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

-கந்தசாமி, பிடமனேரி.

மேலும் செய்திகள்