பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2025-09-21 12:49 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதனை இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்காததால், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் திறந்தவெளியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பாக விரைவில் புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்