விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-09-14 16:43 GMT

சாணார்பட்டியை அடுத்த டி.பஞ்சம்பட்டி அருகே கொசவப்பட்டியில் இருந்து சூசையப்பர் தெருவுக்கு செல்லும் சாலையின் குறுக்காக கட்டப்பட்ட சாக்கடை கால்வாயின் மேல்பகுதி சேதமடைந்த நிலையில் இருக்கிறது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிவதுடன் அப்பகுதியில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்