மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும்

Update: 2025-09-14 07:46 GMT

நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்திலிருந்து காலை 6.40 மணிக்கு தடம் எண் 31 ‘ஏ’ பஸ் செட்டிகுளம், புன்னைநகர், பருத்திவிளை, ஆடராவிளை, வழியாக ஈத்தாமொழிக்கு வந்தது. பின்னர், அங்கிருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு தர்மபுரம் , ஆடராவிளை, வைராகுடி, கோணம் கலைக்கல்லூரி, பெண்கள் கல்லூரி வழியாக பண்டாரத்தோப்புக்கு 20 ஆண்டுகளாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். கொரோனா காலத்திற்கு பிறகு இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், மேற்குறிப்பிட்ட கிராம மக்கள், மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மாணவர்கள் நலன்கருதி மீண்டும் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், ஆடராவிளை.

மேலும் செய்திகள்