கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து சாமளாபுரம், மங்கலம் வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு தடம் எண் 5, 5 ஏ, 5 பி., 5சி, 5டி மற்றும் தடம் எண் 14 ஆகிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை சோமனூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் நீடித்தால் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?