நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை, கருங்கல், தொழிச்சல், கானாவூர் வழியாக மிடாலத்திற்கு தடம் எண் 7/46 அரசு பஸ் சில முறை மட்டும் இயக்கப்படுகிறது. இந்த பஸ் மகளிர் விடியல் சேவையாக இயக்கப்படுவதால் தொழிச்சல் உள்ளிட்ட கிராம மக்களும், பெண்களும் பயனடைந்து வருகின்றன. இந்த பஸ்சை முழுநேரமாக இந்த வழித்தடத்தில் இயக்கினால் பல கிராம மக்கள் பயன்பெறுவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அரசு பஸ்சை இதே வழித்தடத்தில் முழுநேரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.