கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2025-08-31 17:27 GMT

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மருதூர் கிராமத்திற்கு சென்று வருவதற்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால் மருதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொட்டைகுளம், ஊனுகால்புளியங்குளம், வலச்சிக்குளம், பகுதிகளில் இருந்து அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் செய்திகள்