போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-31 15:51 GMT
உளுந்தூர்பேட்டை- திருவெண்ணெய்நல்லூர் சாலையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்