ஸ்ரீமுஷ்ணம் - சிதம்பரம் பிரதான சாலையில் உள்ள தெற்குரத வீதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரில் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்தவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.