தர்மபுரி நகரில் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், நடைப்பயிற்சியாளர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சாலைகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பிடமனேரி சாலையில் இருக்கும் கடைகளின் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வாகனங்களால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா?
-தவமணி, குமாரசாமிப்பேட்டை.