கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகே மழைநீர் செல்ல வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வடிகாலில் பல இடங்களில் மூடி இல்லாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக வரும் வாகனங்கள் மூடியில்லாத மழைநீர் வடிகாலில் சிக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது. அதுபோன்று நடந்து செல்வோரும் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே உடனடியாக மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?