பஸ் சேவையில் மாற்றம் தேவை

Update: 2025-08-24 14:11 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும், ஜங்ஷன் ரெயில் நிலையத்திலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கும் புதிய பஸ் நிலையம் வழியாக இரவு சேவை (நைட் சர்வீஸ்) டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை தினசரி இரவு 11 மணி முதலே இயங்க தொடங்குகின்றன. இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளும் சூழல் உருவாகிறது. எனவே இந்த இரவு சேவை பஸ்களின் நேரத்தை நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாற்றி அமைத்து இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

-நாராயணன், பெரமனூர். 

மேலும் செய்திகள்