அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-08-24 14:10 GMT

தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, மேட்டூர் பகுதிகளில் இருந்து சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்கள் சேலம் 5 ரோடு வழியாக செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வருவதால் பயணிகளை குரங்குச்சாவடி அருகே உள்ள மேம்பால நுழைவு பகுதியிலேயே இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் நடந்து 5 ரோட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அனைத்து பஸ்களும் 5 ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெயபாண்டியன், சேலம்.

மேலும் செய்திகள்