சென்னை வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை எப்போதும் பரபரப்பான சாலை. அந்த பகுதியில் உள்ள அங்குள்ள கல்பனா பஸ் நிறுத்தம் அருகே காலை-மாலை வேளைகளில் மாடுகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றி திரிகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடந்து செல்கிறார்கள். பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.