புகார் எதிரொலி

Update: 2025-08-24 13:38 GMT

சென்னையில் கோயம்பேடு - மீஞ்சூர் செல்லும் 121 எண் கொண்ட மாநகர பஸ், சாலை சீரமைப்பு பணிகள் காரணமாக பழைய வழிதடத்தில் இயக்கப்படவில்லை. ஆனால் பணிகள் நிறைவடைந்த பிறகும் அதேநிலை தொடர்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் துறைசார்ந்த அதிகாரிகள் 121 எண் கொண்ட பஸ்சை பழைய வழித்தடத்தில் இயக்க வழிவகை செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்