திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் பலர் உழவர் சந்தைக்கு அருகே சாலையோரமாக கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அந்த சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உழவர் சந்தைக்கு மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெனடிக், திருப்பூர்.