பஸ் வசதி வேண்டும்

Update: 2025-08-24 11:01 GMT

திருக்காட்டுபள்ளி சுற்றுவட்டார பகுதியில் இருந்து லால்குடி, திண்ணியம் கிராமத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். ஆனால் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து மேற்கண்ட பகுதிக்கு முறையான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து திருக்காட்டுப்பள்ளியில் இருந்து லால்குடி,திண்ணியம் கிராமத்துக்கு செல்ல பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்