பஸ்கள் வருவதில்லை

Update: 2025-08-17 17:54 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், வெள்ளாளகுண்டம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து வரும் டவுன் பஸ்கள் அனைத்தும் அம்மாபேட்டை ரவுண்டானா மிலிட்டரி ரோடு வழியாக பழைய பஸ் நிலையம் செல்கின்றன. இதனால் காந்தி மைதானம், மாரியம்மன் கோவில், சித்தேஸ்வரா பகுதிகளில் வசிக்கும் மக்கள் பஸ் வசதி இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அனைத்து டவுன் பஸ்களும் காந்தி மைதானம் வழியாக செல்ல போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், சேலம்.

மேலும் செய்திகள்