மினி பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2025-08-17 17:42 GMT

ராசிபுரம் ரெயில் நிலையம் வழியாக சென்னை, பழனிக்கும், பெங்களூரு, நாகர்கோவில், பொள்ளாச்சி முதல் ராசிபுரம் வழியாக சென்னைக்கும் பல்வேறு ரெயில்கள் வந்து செல்கின்றன. ராசிபுரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோக்கள் மூலம் தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே ரெயில்கள் வரும் நேரத்திற்கு ஏற்றார் போல் மினி பஸ்களை ரெயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு மினி பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமு, ராசிபுரம்.

மேலும் செய்திகள்