பஸ் வசதி வேண்டும்

Update: 2025-08-17 17:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் ஒன்னகரை கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் பஸ் வசதி இல்லை. இதனால் பல ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று வரும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்னகரை கிராம மக்களின் சிரமத்தை போக்க பஸ் வசதி அவசியம் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தோஷ்குமார், ஒன்னகரை.

மேலும் செய்திகள்