சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இங்கிருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்ல ரெயில்வே நடைபாதை 12 முதல் 16 வரை பயன்படுத்துகிறார்கள். அங்கிருந்து வெளியேறும்வழியின் ஒரு பகுதியை தடுப்புகளை அமைத்து வழியை அடைத்துள்ளனர். இதனால் பயணிகள் அனைவரும் ஒரே வழியாக அனைத்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகாள் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் இதை சரிசெய்ய அந்த தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.