பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் தாலுக்கா அலுவலக உள்ளது. இந்த பகுதியில் இருந்து பொன்னவராயன் கோட்டை பள்ளிக்கூட பஸ் நிறுத்தம் வரை வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இருளில் சிக்கி தவிப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை மற்றும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.