நடைபாதை சேதம்

Update: 2025-08-17 10:20 GMT

கோவை மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம் வடக்கு விநாயகர் கோவில் முதலாவது வீதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இங்குள்ள 3-வது சந்து பகுதியில் பணியின்போது தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. இதனால் நடைபாதை சேதம் அடைந்த நிலையில் கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குழிகளை மூடி நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்