சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குதிரைகுத்தி பள்ளம், பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி பிரிவு, தளவாய்பட்டி ஆகிய பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினமும் வந்து சேலம், தர்மபுரி நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை வந்து செல்லும் சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வதில்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கார்த்தி, ஓமலூர்.