காட்டுமன்னார்கோவில்- திருமூலஸ்தானம் வழியாக எடையார் செல்லும் சாலையின் இருபுறமும் அதிகளவில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதன் கிளைகள் சாலையை ஆக்கிரமித்தபடி செல்கிறது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.