கொல்லிமலை செம்மேட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் எளிதாக செல்ல முடியாமல் சில நேரங்களில் சிரமத்துடன் செல்கின்றன. எனவே அங்கு வாகனங்கள் இடையூறாக நிற்காமல் ஓரமாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
-நாராயணன், செம்மேடு.