போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-08-10 17:32 GMT

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிலைய போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதேபோல் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பொதுமக்கள், பஸ் டிரைவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

-ராம், தர்மபுரி.

மேலும் செய்திகள்