சரியான நேரத்திற்கு வராத அரசு பஸ்

Update: 2025-08-10 15:46 GMT

அரியலூர் மாவட்டம் தாபழூர் ஒன்றியம், முத்துவாஞ்சேரியில் இருந்து நகரப் பஸ் அரியலூருக்கு செல்கிறது. மாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.15 மணி அளவில் விக்கிரமங்கலமும், 4.20 மணி அளவில் நாகமங்கலமும் செல்ல வேண்டிய நகர பஸ் 4 மணிக்கு உள்ளாகவே விக்கிரமங்கலம் மற்றும் நாகமங்கலம் பகுதிகளை கடந்து சென்று விடுகிறது. முன்பதாகவே சென்று விடுவதால் பள்ளிகள் முடிந்து வீட்டுக்குச் செல்லும் மாணவர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். எனவே சரியான நேரத்தில் நகர பஸ்சை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

மேலும் செய்திகள்